திருவிழாவின் போது மக்கள் கூட்டத்திற்குள் காரை செலுத்திய நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஜெர்மன் நகரில் Volkmarsen பகுதியில் திருவிழா ஒன்று நடந்துள்ளது. அந்தத் திருவிழாவின்போது Maurice என்பவர் தனது காரை மக்கள் கூட்டமாக நின்று இடத்திற்குள் செலுத்தியுள்ளார். இதில் ஏராளமானோர் படுகாயமடைந்துள்ளனர். குறிப்பாக சிறுவர்களும் இதில் அடங்குவர். மேலும் இந்த விபத்தில் 150 பேருக்கு மேலாக மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் இவர் மீது 96 கொலை முயற்சி வழக்குகளும் மோசமான அளவில் உடலுக்கு ஊறு விளைவிக்கும் குற்றத்திற்காக 90 வழக்குகளும் ஆபத்தான வகையில் வாகனம் ஓட்டிய குற்றச்சாட்டிற்கும் காவல்துறையினர் வழக்குபதிவு செய்துள்ளனர். இதனையடுத்து Maurice கைது செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து அவரிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர் இதைப் பற்றி எதுவும் கூறவில்லை என்பதால் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்