Categories
இந்திய சினிமா சினிமா

உயிரை காப்பாற்ற ஆக்சிஜன் கொடுக்க…. பைக்கை விற்கும் பிரபல நடிகர்…. ரசிகர்கள் பாராட்டு…!!!

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகம் எடுத்து வருகிறது. இதனால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இந்நிலையில் தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனாவின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் நிரம்பி வழிவதால் படுக்கை வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது.

எனவே பள்ளிகள், கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்களில் படுக்கை வசதிகள் ஏற்படுத்த தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. கொரோனா இரண்டாவது அலை தாக்கத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. இது குறித்த உண்மை நிலவரம் உறைய வைக்கிறது. இந்நிலையில் தலைநகர் டெல்லியிலேயே ஆக்சிஜன் பற்றாக்குறையால் கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர்.

இந்நிலையில் பலரும்கொரோனா  நோயாளிகளுக்கு ஆக்சிஜன் கிடைப்பதற்காக தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர். அந்த வகையில் தெலுங்கு, ஹிந்தி படங்களில் நடித்து வரும் ஹர்ஷவர்தன் ரானே, கொரோனாவின் தீவிர பரவலால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள ஆக்சிஜன் கிடைக்க தன் பைக்கை விற்கப் போவதாக அறிவித்துள்ளார். இதை பார்த்த அவருடைய ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |