தமிழக மக்களின் வளர்ச்சிக்காக கழக அரசு எடுக்கும் அனைத்து முயற்சிக்கும் அனைவர் ஒத்துழைப்பும் தேவை எனக் கேட்டுக் கொள்கிறேன்.” என்று ஓ.பன்னீர்செல்வத்தின் வாழ்த்துக்கு மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் அடுத்த முதல்வராக பதவியேற்க உள்ள ஸ்டாலினுக்கு அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்திருந்த நிலையில், கட்சியின் ஒருங்கிணப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும் தொலைப்பேசியில் தொடர்புகொண்டு தனது வாழ்த்துகளை தெரிவித்திருக்கிறார்.
அதேபோல தனது ட்விட்டர் பக்கத்திலும் அவர் வாழ்த்தை பகிந்திருந்தார். அதில், “தமிழகத்தின் முதலமைச்சராக ஆட்சிப் பொறுப்பேற்கவிருக்கும் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று பதிவிட்டிருந்தார்.
இதையடுத்து ஓ.பன்னீர்செல்வத்துக்கு, தனது ட்விட்டரில் பதில் அளித்துள்ள மு.க,ஸ்டாலின், ‘ ஓ.பன்னீர்செல்வம் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்துத் தெரிவித்தார். அவருக்கு எனது இதயமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழக மக்களின் வளர்ச்சிக்காக கழக அரசு எடுக்கும் அனைத்து முயற்சிக்கும் அனைவர் ஒத்துழைப்பும் தேவை எனக் கேட்டுக் கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.