கனடாவில், இளைஞர் ஒருவர் தன் பெற்றோர் கண்முன்னே கடலில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையிலிருந்து கனடாவிற்கு குடிபெயர்ந்த தம்பதிகள் Don Jayasinghe மற்றும் Chandima. இவர்களது மகன் Supul Jayasinghe (21). இந்நிலையில் இவர்கள் மூவரும் கடந்த ஏப்ரல் 21ம் தேதியன்று Supul ன் தேர்வு முடிவடைந்ததை கொண்டாடுவதற்காக Flatrock பகுதியிலிருக்கும் கடற்கரைக்கு சென்றிருக்கிறார்கள்.
அப்போது உயரமாக இருந்த பாறையில் Supul தன் நாயுடன் ஏறியுள்ளார். இதனை கண்ட Supulன் தந்தை அவரை எச்சரித்திருக்கிறார். எனினும் நாய் ஓடியதால் அதனை பிடிப்பதற்காக பின்தொடர்ந்து ஓடியுள்ளார். அந்த சமயத்தில் Supul ன் கால் வழுக்கி திடீரென்று கடலில் விழுந்துவிட்டார்.
இதனால் Supul பாறைகளைப் பிடித்து தப்பலாம் என்று நினைத்தபோது அனைத்து பாறைகளும் வழுக்குப்பாறைகளாக இருந்துள்ளது. எனவே அவர் ஏறுவதற்கு எவ்வளவோ முயற்சி செய்தும் முடியாமல் போனதால் கூச்சலிட்டுள்ளார். இதனால் அவரின் தந்தை நாய் பெல்ட்டை வீசி, அதனை பிடித்து மேலே வருமாறு கூறியிருக்கிறார்.
ஆனால் Supul லால் அதனை பிடிக்க இயலாமல் போனது. இதில் அவரின் தந்தையும் கடலில் விழும் நிலைக்கு தள்ளப்பட்டார். இதனால் தடுமாறிய அவர் சகஜ நிலைக்கு திரும்புவதற்குள் அந்த இடம் இருளடைந்தது. இதனிடையே 10 நிமிடங்கள் கடந்த நிலையில் Supul தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதனைத்தொடர்ந்து கனடாவில் வசிக்கும் பிற இலங்கை மக்கள் ஒன்றுகூடி Supulக்கு அஞ்சலி செலுத்தியிருக்கிறார்கள்.