Categories
உலக செய்திகள்

சிறுமிக்கு பாலியல் தொல்லை…. தாய்க்கு விடுக்கப்பட்ட மிரட்டல்…. அதிரடி நடவடிக்கையில் போலீஸ்….!!

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து விட்டு அவரது தாயாரை மிரட்டிய நபர்  காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

பிரித்தானியாவில் கிரேட் மேன்சஸ்டர் பகுதியில் வசித்து வருபவர் ஆண்ட்ரூ டேவிட் வால்ஸ். இவர் தனக்கு தெரிந்த சிறுமி ஒருவரிடம் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதைப்பற்றி சிறுமி தனது தோழியிடம் மெசேஜ் மூலம் தகவல் அளித்துள்ளார். இதனை சிறுமியின் தாயார் கண்டுபிடித்துள்ளார். இதை தெரிந்து கொண்ட ஆண்ட்ரூ சிறுமியின் தாயாரிடம் இதைப் பற்றி போலீசில் சொல்லக்கூடாது என மிரட்டி இருக்கிறார்.

ஆனால் சிறுமியின் தாயார் இது குறித்து போலீசிடம் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர். அங்கு அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. மேலும் பாலியல் குற்றவாளிகள் பதிவேட்டில் கையெழுத்து போடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Categories

Tech |