இந்தியாவில் உள்ள நோயாளிகளுக்கு இலவசமாக மருந்துகளை வழங்குவதாக பைசர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரம் எடுத்துள்ள காரணத்தினால் இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதைத் தொடர்ந்து இந்தியாவில் உள்ள நோயாளிகளுக்கு பலரும் உதவி கரம் நீட்டி வருகின்றனர்.
இந்நிலையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க உதவும் வகையில் தேவைப்படும் மருந்துகளை இலவசமாக வழங்குவதாக பைசர் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் மொத்த மதிப்பு 70 பில்லியன் டாலர் என கணக்கிடப்பட்டுள்ளது. அதாவது இந்திய ரூபாயில் 517 கோடி ஆகும். தடுப்பூசிக்கு இதுவரை அனுமதி வழங்கப்படாத நிலையில் அனுமதி வேண்டி இந்திய அரசுடன் கலந்து ஆலோசித்து வருவதாக பைசர் நிறுவனம் தெரிவித்துள்ளது.