Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

முக்கிய தருணத்தில் முதல்வராகும் ஸ்டாலின்…. நடிகர் கார்த்தி வாழ்த்து…!!!

திமுக தலைவர் ஸ்டாலினுக்கு முன்னணி நடிகர் கார்த்தி வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நேற்று முன் தினம் நடைபெற்றது. இதில் திமுக வெற்றி பெற்றுள்ளது. இதை தொடர்ந்து பல்வேறு அரசியல் பிரமுகர்களும், திரை பிரபலங்களும் திமுகவிற்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.அந்த வகையில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் கார்த்தி திமுக தலைவர் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மேலும் இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது, மிக முக்கிய தருணத்தில், தமிழக முதல்வராகும் திரு முக ஸ்டாலின் அவர்கள், நமது தனிப்பெரும் அடையாளங்களான சமூக நீதி, மத நல்லிணக்கம்,கல்வி, மருத்துவம், சுகாதாரத்தோடு, வேளாண்மை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும் முக்கியத்துவம் அளித்து,மக்கள் விரும்பும் நல்லாட்சி அமைத்திட வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |