Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகம் முழுவதும்… மு.க ஸ்டாலின் புதிய அதிரடி உத்தரவு…!!

சுகாதாரத்துறை செயலாளர் மற்றும் தலைமைச் செயலாளர் உடன் ஆலோசனை நடத்திய முகஸ்டாலின் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இதை தொடர்ந்து நேற்று தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை முடிவு பெற்றது. இதில் திமுக கட்சி வெற்றி பெற்றது. இதை அடுத்து வரும் மே 7ஆம் தேதி திமுக கட்சியின் தலைவர் மு க ஸ்டாலின் முதல்வராக பதவியேற்கிறார்.

அதற்கு முன்பாக முக ஸ்டாலின் தலைமை செயலாளர் சுகாதார செயலாளர் வருவாய்த்துறை செயலாளர் உடன் ஆலோசனையில் ஈடுபட்டார். அதில் கொரோனா சிகிச்சைக்கான மருந்துகள், ஆக்சிஜன் தடையின்றி கிடைக்க உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவித்தார். இதைத்தொடர்ந்து கொரோனா தடுப்பு, சிகிச்சைகளை மேம்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். முக்கிய நகரங்களில் ரெம்டெசிவர் மருந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

Categories

Tech |