கொரோனா தடுப்பூசி மருந்து கொள்முதல் செய்வதற்கு புதிதாக மத்திய அரசு எவ்வித ஆர்டரும் கொடுக்கப்படவில்லை என்ற தகவலுக்கு சுகாதாரத்துறை மறுப்பு தெரிவித்துள்ளனர்.
இந்தியா முழுவதும் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக கொரோனா நோய்களால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகின்றனர். சில மாதங்களாக இதனின் தாக்கம் குறைந்த நிலையில் மீண்டும் இரண்டாவது அலையாக மின்னல் வேகத்தில் பரவி வருகின்றது. இதனை கட்டுப்படுத்த பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையிலும் கட்டுக்குள் கொண்டு வரமுடியவில்லை. நோய் வருவதற்கு முன்பாகவே கொரோனா தடுப்பூசி போடப் பட்டு வருகின்றது.
தற்போது கோவிஷீல்டு,கோவேக்சின் ஆகிய தடுப்பு மருந்துகள் பயன்படுத்தி வருகின்றன. இதில் கோவிஷீல்டு மருந்தை புனேவில் உள்ள சீரம் திரு நிறுவனமும், கோவேக்சின் மருந்தை ஹைதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்து வழங்கி வருகின்றது. இந்த நிறுவனங்களுக்கு அரசு இறுதியாக 10கோடி மருந்து தயாரிக்க ஆர்டர் கொடுத்து இருந்தது. அவை இந்த மாதம் மத்தியில் இறக்குமதி செய்து முடித்து விடுவோம் என்று மருந்து நிறுவனங்கள் கூறியுள்ளன.
இதற்குப் பின்பு மருந்து கொள்முதல் செய்வதற்கு புதிதாக மத்திய அரசு இதுவரை எந்த ஆர்டரும் கொடுக்கப்படவில்லை என்று செய்தி வெளியாகியுள்ளது. ஆனால் மத்திய சுகாதாரத்துறை கொரோனா தடுப்பூசிகளுக்கு புதிய ஆர்டரை மத்திய அரசு கொடுக்கவில்லை என்று ஊடகத் தகவல்கள் தவறானவை என மறுப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சுகாதாரத்துறை ‘மத்திய அரசு இறுதியாக கொடுக்கப்பட்ட 10 கோடி டோஸ் ஆடரில், மே 3-ஆம் தேதிக்குள் 8.744 கோடி டோஸ் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. அதன்பின் ஜூலை மாதங்களுக்குள் 5 கோடி கோவேக்சின் தடுப்பூசி டோஸ்களுக்காக ரூ 787.50 பாரத் பயோடெக் நிறுவனத்துக்கு ஆடர் வழங்கப்பட்டுள்ளது’ என்றும் சுகாதாரத்துறை விளக்கம் தெரிவித்துள்ளனர்.