Categories
தேசிய செய்திகள்

தேர்தல் முடிந்த கையோடு…. அதிகரித்தது பெட்ரோல்-டீசல் விலை…!!!

மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (மே-4).

இந்நிலையில் சில தினங்களாக பெட்ரோல் லிட்டருக்கு 19 காசுகள் குறைந்து ரூ.92.58க்கும், டீசல் விலை லிட்டருக்கு 22 காசுகள் குறைந்து ரூ.85.88க்கும் விற்பனை செய்யப்பட்டது. கடந்த 18 நாட்களாகவே மாற்றமின்றி இருந்த பெட்ரோல்-டீசல் விலை, இன்று பெட்ரோல் லிட்டருக்கு 12 காசுகள் அதிகரித்து ரூ.92.55க்கும், டீசல் லிட்டருக்கு ரூ.15 காசுகள் அதிகரித்து ரூ.85.90க்கும் விற்பனையாகிறது. இந்நிலையில் தமிழகம் உட்பட ஐந்து மாநிலங்களின் தேர்தல் முடிவடைந்த நிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |