ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு 1.11 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் பாதிப்பு உலக அளவில் அதிகரித்து கொண்டே வருகிறது. கொரோனா தொற்று அதிகம் பாதித்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்திலும், இந்தியா 2-வது இடத்திலும், பிரேசில் மூன்றாவது இடத்திலும் உள்ளது. இதுவரை கொரோனா வைரஸால் 15 கோடிக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 32 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்று அதிகம் பாதித்த நாடுகளின் பட்டியலில் 6-வது இடத்தில் ரஷ்யா உள்ளது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் ரஷ்யாவில் 8,489 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் ரஷ்யாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 48,31,744 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனாவுக்கு 311 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 198 ஆக அதிகரித்துள்ளது. மேலும் மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 44.50 லட்சம் பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது மருத்துவமனைகளில் 2.70 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.