Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

உறவினருடன் சென்ற பெண்… திடீரென நடந்த சம்பவம்… கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

மோட்டார் சைக்கிள் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டத்திலுள்ள மாதவி மாரியம்மன் கோவில் பகுதியில் செல்வராஜ் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு சோபனா என்ற ஒரு மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு கனிஷ் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் உறவினரின் நிகழ்ச்சிக்காக சோபனா தனது குழந்தையுடன் அதே பகுதியில் வசிக்கும் உறவினரான பாண்டியன் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சென்று சென்றுள்ளார் . இதனையடுத்து அந்த நிகழ்ச்சியை முடித்துவிட்டு இவர்கள் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் திரும்ப சென்று கொண்டிருந்தனர்.

இந்நிலையில் இவர்கள் மோட்டார் சைக்கிளில் கோபிலியன் குடிகாடு பகுதியில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளில் அங்குள்ள  பள்ளத்தில் கவிழ்ந்து விட்டது.  இந்த விபத்தில் சோபனா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதில் அவருடைய குழந்தையான கனிஷ் மற்றும் பாண்டியன் படுகாயமடைந்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்த கனிஷ் மற்றும் பாண்டியனை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து சோபனாவின் உடலை கைப்பற்றிய காவல்துறையினர் உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிந்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |