நடந்து முடிந்த தமிழக சட்டசபைத் தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் திமுக வெற்றி பெற்று முக ஸ்டாலின் முதல்வராக இருக்கிறார். 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றும் திமுக ஆட்சியை மேற்கொண்டு வருகின்றனர். திமுக வெற்றி குறித்து பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்..
கால் வலிக்க நடந்தோம் கத்தி கத்தி செத்தோம் அதற்காகவே மக்கள் எங்களுக்கு கூடுதலாக வாக்கு தந்திருக்க வேண்டும். ஆனால் தரவில்லை அதற்காக எங்களுக்கு வருத்தம் இல்லை. பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் வீதி வீதியாக நடந்து சொன்னோம். மேடை போட்டு கருத்துக்களை சொன்னோம். அதை எல்லாவற்றையும் பணம் மறைத்து விடும் என்றால், மிக பேராபத்தாக ஜனநாயகம் சென்று கொண்டு இருக்கும் கேடுகெட்ட பண நாயக கட்டமைப்பை நாம் பார்த்துக்கொண்டு இருக்கிறோம் என சீமான் தெரிவித்தார்.