Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுக ஜெயிச்சுடிச்சு…. பேராபத்தில் தமிழகம்…. சீமான் ஆவேசம்….!!

திமுக வெற்றி குறித்து செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஜனநாயகம் பேரபத்தாக சென்று கொண்டு இருக்கும் கேடுகெட்ட பண நாயக கட்டமைப்பை நாம் பார்த்துக்கொண்டு  இருக்கிறோம்.

இதுகுறித்து விவாதங்களை வைத்து எதிர்வரும் தலைமுறைகளுக்கு நல்ல அரசியலை கற்பிக்க வேண்டும். இல்லையென்றால் இது முதலாளிகளின் வேட்டைக் காடாக இருக்குமே தவிர மக்கள் வாழுகின்ற நாடாக இருப்பதற்கு வாய்ப்பு கிடையாது. பணம் தான் அனைத்தையும் தீர்மானிக்கும் என்றால் அங்கு மக்களுக்கான சேவை, முறையான நிர்வாகம், அர்ப்பணிப்பு, ஈடுபாடு உழைப்பு என்பது எல்லாம் கேள்விக்குறியாகிவிடும்.

என்ன வேண்டுமானாலும் செய்யலாம். மக்களைப் போய் சந்திக்காமல் இருக்கலாம். அவர்கள் ஒரு வேலையும் செய்யாமல் இருக்கலாம். ஆனால் தேர்தல் நேரத்தில் பணம் கொடுத்தால் போதும் வாக்கு பெற்று விட முடியும் என்ற நிலை இருக்கும் பொழுது, இந்த பேராபத்தை நோக்கி நாடு போய்க்கொண்டு இருக்கிறது என்றுதான் அர்த்தம் என சீமான் கூறினார்.

Categories

Tech |