Categories
உலக செய்திகள்

எங்கள் நாட்டிற்குள் வர அனுமதி தரோம்…. ஆனால் கட்டாயம் இதை பண்ண வேண்டும்…. தகவலை வெளியிட்டது ஐரோப்பிய ஆணையம்….!!

தடுப்பூசி போட்டுக்கொண்டால் வெளிநாட்டு பயணிகளும் எந்த தடையும் இல்லாமல் ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் நுழைய அனுமதிக்க வேண்டும் என ஐரோப்பிய ஆணையம் தெரிவித்துள்ளது.

ஒரு நல்ல சுகாதார நிலைமை உள்ள நாடுகளில் இருந்து வரும் அனைத்து பயணிகள் மட்டுமல்லாமல் ஐரோப்பிய ஒன்றியத்தால் அனுமதிக்கப்பட்ட தடுப்பூசிகளின் 2 டோஸ்களையும் போட்டுக் கொண்ட நபர்களும் அத்தியாவசியமற்ற காரணங்களுக்காகவும் ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் நுழைவதற்கு அனுமதிக்க வேண்டும் என ஐரோப்பிய ஆணையம் வழிமொழிந்துள்ளது. மேலும் பயணிகளின் தனிமைப்படுத்துதல் அல்லது சோதனை போன்ற நடவடிக்கைகள் இல்லாமல் பயணிப்பதற்கு தடுப்பூசி சான்றிதழ் அவசியம் எனவும் கூறியுள்ளது.

அதேநேரத்தில் எந்தெந்த தடுப்பூசிகள் எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற விவரங்கள் அந்தந்த ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் முடிவு செய்ய வேண்டும் எனவும் பயணிகள் பயணம் செய்வதற்கு  இரண்டு வாரத்திற்கு முன்பாகவே ஐரோப்பிய ஒன்றியத்தால் பரிந்துரைக்கப்பட்ட தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் எடுத்துக்கொண்டிருக்க வேண்டும் எனவும் ஐரோப்பிய ஆணையம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |