தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைக்க இருக்கிறது. திமுக வெற்றி குறித்து பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தேர்தல் ஆணையம் சும்மா, நாடக கம்பெனி. அது சரி கிடையாது. அதற்கு முழு அதிகாரம் கொடுக்க வேண்டும். போன தடவை 89 கோடி முதலீடு செய்தேன். அதே போல இந்த தடவையும் செய்கிறார்கள். அதை எப்படி சகிக்கிறது தேர்தல் ஆணையம். இதனால் இந்த வேட்பாளர்கள் பத்தாண்டுகள் தேர்தலில் நிற்பதற்கு தடை, தகுதி நீக்கம் செய்து இரண்டு தடவை நடவடிக்கை எடுத்து பாருங்கள் பணம் கொடுக்க மாட்டார்கள்.
மக்கள் பணம் வாங்காமல் இருக்கும்பொழுது அவனுக்கு உரிமை இருக்கும். உன்னை நம்பி வாக்கு செலுத்தினேன்… நீ என் சாலையை போடவில்லை ? நீ ஏன் ஒழுங்காக குடிநீர் கொடுக்கவில்லை ? என்று கேட்கும் உரிமை இருக்கும். இப்பொழுது கேட்க முடியாது ஏன் சாலையை போடவில்லை என்று கேட்க முடியாது. நோட்டை வாங்காமலேயா ஓட்டு போட்டாய் கேட்கலாம். பணம் வாங்கி ஓட்டு போட்டதால் இனி வெற்றி பெற்றவர்கள் தொகுதிக்கு வர மாட்டார்கள்.
இது எவ்வளவு கொடுமையான கட்டமைப்பு இருக்கிறது. இதை ஒழிக்க வேண்டும் என்றால் ஒரு தலைமுறை இதற்கு பேர் எழுச்சியாக தயார் ஆக வரவேண்டும். அரசியல் என்பது ரத்தம் சிந்தாத போர் என்கிறார்கள். போர் என்பது இரத்தம் சிந்துகின்ற அரசியல் என்கிறார்கள். நாங்கள் ரத்தம் சிந்தாத போரை செய்து கொண்டு இருக்கிறோம். அது ஒருநாள் எங்களுடைய சிந்தனையோடு ஒற்றுப் போகக்கூடிய புரட்சிகர இளைஞர்கள் பெரும் எண்ணிக்கையில் திரளும் போது இது அழித்து விட்டு நாங்கள் மேலே ஏறி வருவோம்.
எத்தனை நாட்களுக்கு இந்த பண நாயகத்தை சகிப்பான் ஒரு தலைமுறை. அவன் ஒருநாள் செருப்பு, கட்ட கம்பு வைத்து விரட்டி விரட்டி அடிப்பான். கேரளாவில் அடிக்கிறான். இங்கே காசு கொடுக்கவில்லை என்றால் அடிக்கிறான். அங்கு காசு கொடுத்தால் அடிக்கிறான். அவன் சரியாக இருக்கிறான்.நாம் கற்பிக்கவில்லை. அரசியல் என்பது… தேர்தல் என்பது…. வாக்குக்கு பணம் வாங்கிக்கொண்டு ஓட்டு போடுவது என்று நாம் அரை நூற்றாண்டுகளில் கற்பித்து விட்டோம்.
50 ஆண்டுகளாக பணம் கொடுத்தால்தான் மக்கள் நமக்கு ஓட்டு போடுவார்கள் என்ற நிலைக்கு கொண்டுவந்து தான் இவர்களின் சாதனை. 50 ஆண்டுகளாக மக்களின் வாழ்க்கைத் தரம் மதிப்புமிக்க உரிமையை விற்கின்ற ஏழ்மை நிலையில் வைத்தது தான் இவர்களின் சாதனை என சீமான் தெரிவித்தார்.