Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

ஏன் இவ்வளவு வேகம்… பேருந்து-மோட்டர் சைக்கிள் மோதல்… கோர விபத்தில் பறிபோன உயிர்…!!

மோட்டார் சைக்கிள் மீது பேருந்து மோதி விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பட்டகபட்டி பகுதியில் திலகவதன் என்ற கூலித்தொழிலாளி வசித்து வந்துள்ளார். இந்நிலையில் திலகவதன் காரிமங்கலம் நோக்கி தனது மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இதனையடுத்து இவரது மோட்டார் சைக்கிள் பொம்மஅல்லி பிரிவு ரோடு அருகே சென்று கொண்டிருந்த போது, அவ்வழியாக வேகமாக சென்ற தனியார் பேருந்து இவரின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட திலகவதன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவலறிந்த காரிமங்கலம் காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |