ரத்தத்தில் சர்க்கரையின் அளவு, அளவை அறிய உதவும் ஹைடெக் வாட்சுகளை ஆப்பிள் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு, மது அருந்தினால் இரத்தத்தில் உள்ள ஆல்கஹாலின் அளவு ஆகியவற்றை கண்டறியும் வகையில் ஆப்பிள் நிறுவனம் புதிய வாட்ச் ஒன்றை தயாரித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான தொழில்நுட்பத்தை அமெரிக்க மருத்துவத் தொழில்நுட்ப நிறுவனமான ராக்லி போட்டோனிக்ஸ் என்ற நிறுவனத்திடமிருந்து வாங்குவதற்கு ஆப்பிள் நிறுவனம் முடிவு செய்துள்ளது. அது போன்று இந்த வாட்ச்சில் ரத்த அழுத்தத்தை கண்டறியும் தொழில்நுட்பம் இருக்கும் என கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் மது அருந்துவோருக்கு, சக்கரை நோயாளிகளுக்கு வரப்பிரசாதமாக இந்த வாட்ச் இருக்கும் என்றும், ஆனால் விலை அதிகமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.