Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

தந்தையை நினைத்து பெருமைப்படும் ஸ்ருதிஹாசன்…. வைரலாகும் பதிவு…!!!

நடிகை ஸ்ருதிஹாசன் தனது தந்தையை எண்ணி பெருமைப்படுவதாக தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்றுள்ளது. இதேபோல் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் அவர் தோல்வியை சந்தித்துள்ளார். இந்நிலையில் கமல்ஹாசனின் மகளும், பிரபல நடிகையுமான ஸ்ருதிஹாசன் தனது சமூக வலைதள பக்கத்தில் தன் தந்தையை எண்ணி பெருமைப்படுவதாக தெரிவித்துள்ளார்.

சுருதிஹாசனின் இன்ஸ்டாகிராம் பதிவு

மேலும், கமல்ஹாசன் கையில் டார்ச் லைட் கட்சி சின்னத்தை வைத்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, அதில் “என்னுடைய தந்தையை நினைத்து நான் எப்போதும் பெருமைப்படுகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |