Categories
உலக செய்திகள்

இனிய சமூக இடைவெளியை பின்பற்ற அவசியம் இருக்காது…. தளர்வுகள் குறித்து முடிவு செய்துள்ள பிரதமர்….!!

பிரிட்டனில் அடுத்த கட்ட தளர்வுகள் குறித்து பிரதமர் போரிஸ் ஜான்சன் முடிவு செய்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

பிரிட்டனில் படிப்படியாக கொரோனா குறைந்து வருவதை தொடர்ந்து அடுத்த கட்ட தளர்வுகள் குறித்து பிரதமர் போரிஸ் ஜான்சன் முடிவு செய்துள்ளார். அதில் ஜூன் மாதம் முதல் மக்கள் சமூக இடைவெளியை பின்பற்ற அவசியம் இருக்காது என்றும் மே 17 முதல் ஆறு பேருக்கு அதிகமான மக்கள் கூடிப் பேசலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடந்தது உறவினர்கள் வீட்டில் இரவில் தங்கவும் உறவினர்களுடன் வெளியே செல்லவும் அனுமதி அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மே 17 முதல் மக்கள் வெளிநாடு சுற்றுப் பயணம் மேற்கொள்ளலாம் என்றும் இதுவரை 50 மில்லியன் மக்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அதனால் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |