80 வயது மதிக்கத்தக்க மூதாட்டி இறந்து கிடந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மணவாளநகர் ஒண்டிகுப்பம் பகுதியில் 80 வயது மதிக்கத்தக்க மூதாட்டியின் சடலம் கிடப்பதாக அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி மணவாளநகர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர்.
அதன்பின் இறந்து கிடந்த மூதாட்டியின் உடலை கைப்பற்றி திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இறந்து கிடந்த மூதாட்டியின் விவரம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.