இரண்டு படகுகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 26 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வங்காளதேசத்தில் ஓடுகின்ற பத்மா நதியில் பங்களா பஜார் பகுதியில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு ஒரு படகு சென்று கொண்டிருந்தது. அந்த சமயத்தில் மணல் ஏற்றி மற்றொரு படகு சென்று கொண்டிருந்தது. இந்த இரண்டு படகுகளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 26 பேர் உயிரிழந்ததாகவும் பலர் காணாமல் போனதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் இதில் 5 பேர் உயிருடன் மீட்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்தானது படகில் அதிக பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்றதால் நிகழ்ந்திருக்கலாம் எனக் கூறப்படுகின்றது. மேலும் வங்கதேசத்தில் படகு பயணங்களின்போது பாதுகாப்பு நடைமுறைகள் கடைபிடிப்பதால் ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.