நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஜகமே தந்திரம் திரைப்படம் 17 மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாகவுள்ளது .
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் . இவர் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான கர்ணன் திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது. தற்போது நடிகர் தனுஷ் தி கிரே மேன் ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்புக்காக வெளிநாடு சென்றுள்ளார். மேலும் தனுஷ் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜகமே தந்திரம் திரைப்படம் வருகிற ஜூன் 18-ஆம் தேதி நெட்ப்ளிக்ஸில் வெளியாக உள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் ஜகமே தந்திரம் திரைப்படம் 17 மொழிகளில் டப் செய்யப்பட்டு ரிலீஸாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . தமிழில் உருவான ஒரு திரைப்படம் 17 மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது .