இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகம் எடுத்து வருகிறது. இதனால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இந்நிலையில் தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனாவின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் நிரம்பி வழிவதால் படுக்கை வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது.
எனவே பள்ளிகள், கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்களில் படுக்கை வசதிகள் ஏற்படுத்த தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. கொரோனா இரண்டாவது அலை தாக்கத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. இது குறித்த உண்மை நிலவரம் உறைய வைக்கிறது. இந்நிலையில் தலைநகர் டெல்லியிலேயே ஆக்சிஜன் பற்றாக்குறையால் கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர்.
இதனால் கொரோனாவால் இந்தியா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக டெல்லியில் மோசமான சூழல் உருவாகியுள்ளது. இதனால் பலத்த கட்டுபாடுகள் கொண்டுவரப்பட்டு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், “டெல்லியில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு தேவையான 2 மாத ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என்றும், ஆட்டோ, வாடகை டாக்சி ஓட்டுனர்களுக்கு ரூ5 ஆயிரம் வீதம் உதவித்தொகை வழங்கப்படும்” என தெரிவித்துள்ளார்.