Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

தொழிலாளர்களின் கூலி குறைக்கப்படும் நிலை… மூலப்பொருட்களின் விலை உயர்வு… தீப்பெட்டி உரிமையாளர்கள்கடும் அவதி…!!

தீப்பெட்டி மூலப்பொருட்களின் விலை உயர்வால் தீப்பெட்டி ஆலைகளின் உரிமையாளர்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை ஒன்றியம், ஏழாயிரம்பண்ணை, கீழ செல்லையாபுரம், கணஞ்சாம்பட்டி, சிவ சங்கு பட்டி, இ.எல்.ரெட்டியார்பட்டி, ஊத்துப்பட்டி, செவல்பட்டி ஆகிய சுற்றுவட்டாரத்தில் பல தீப்பெட்டி தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றது. இந்நிலையில் கடந்த ஆண்டு கையினால் தயாரிக்கப்படும் தீப்பெட்டிகளுக்கு 5%  மற்றும் இயந்திரத்தால் தயாரிக்கப்படும் தீப்பெட்டிகளுக்கு 12% ஜிஸ்டி வரி இருந்துள்ளது.

ஆனால் தற்போது கையினால் தயாரிக்கப்படும் தீப்பெட்டிகளுக்கும் 12% ஜிஎஸ்டி வரியை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. இதனையடுத்து தீப்பெட்டி தயாரிக்கும் மூலப் பொருள்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. ஆகையால் தொழிலாளர்களின் கூலியை குறைக்க வேண்டிய நிலைமைக்கு தீப்பெட்டி உரிமையாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர். எனவே தீப்பெட்டி தயாரிக்கும் மூலப் பொருள்களின் விலையை குறைக்க வேண்டும் என உரிமையாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Categories

Tech |