கொரோனா பரவல் அதிகமாக உள்ள காரணத்தினால் ஐபிஎல் போட்டியை ரத்து செய்ய வேண்டும் என்று மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது .இதற்கான விசாரணை நாளைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இதை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இதை தொடர்ந்து ஐபிஎல் போட்டிகளும் இந்தியாவில் தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கொல்கத்தாவில் இருவருக்கும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சேர்ந்த இருவருக்கும் கொரோனா உறுதிசெய்யப்பட்டது. இதனால் ஐபிஎல் போட்டிகள் நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஐபிஎல் தொடரை ரத்து செய்ய வேண்டும் என்று மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.