தமிழகத்தின் சில தினங்களாகவே கடும் வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக சென்னையில் அதிகமாக வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனை தொடர்ந்து இன்று முதல் அக்னி நட்சத்திரமும் தொடங்கியுள்ளது.
இந்நிலையில் கேரளா மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்றும் நாளையும் கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தர்மபுரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.