நடிகர் ரஜினியின் அடுத்த படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்குவதாக தகவல் பரவி வருகிறது.
தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினி நடிப்பில் அண்ணாத்த திரைப்படம் உருவாகி வருகிறது. இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கும் இந்த படத்தில் மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, சூரி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதை தொடர்ந்து ரஜினியின் 169வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பதாக தகவல் பரவி வந்தது. மேலும் இந்த படத்தை கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் பட இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்க இருப்பதாக கூறப்பட்டது .
The News which is spreading about my next film is not true.Will update u soon…Thanks for the love and support.Stay Safe and Take Care🙏🏾🙏🏾🙏🏾
— Desingh Periyasamy (@desingh_dp) May 3, 2021
இந்நிலையில் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ‘எனது அடுத்த படம் குறித்து பரவி வரும் தகவல் உண்மையல்ல . விரைவில் இதுகுறித்து அறிவிக்கிறேன். உங்கள் அன்பிற்கும், ஆதரவிற்கும் நன்றி. பாதுகாப்பாக இருங்கள்’ என பதிவிட்டுள்ளார். இதிலிருந்து தேசிங்கு பெரியசாமி ரஜினியின் 169வது படத்தை இயக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது.