Categories
தேசிய செய்திகள்

அசாம்: சிறையில் இருந்தபடியே தேர்தலில் வெற்றி.. சாதனை படைத்த அகில் கோகோய்….!!

அசாம் மாநிலத்தில் சட்டசபை தேர்தலில் சிட் சாகர் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக என்ற புதிய கட்சியின் நிறுவனரான கோக்கோ சிறையில் இருந்தபடியே வென்றுள்ளார்.

இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள அசாம் மாநிலத்தில் தகவல் அறியும் உரிமைச்சட்ட போராளியாக 46 வயது நிரம்பிய அகில் கோகோய் கடந்த 2019ஆம் ஆண்டு தேசத் துரோக குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அசாமில் கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி சட்டசபை தேர்தலில் ராய்ஜோர் தள் என்ற புதிய கட்சியின் நிறுவனரான அகில், தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டார். இவர் சிறையில் அடைக்கப்பட்டதால் நேரில் சென்று மக்களிடையே பிரசாரம் செய்ய வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனாலும் சிறையில் இருந்தபடியே பல திறந்த  மடல்களை தொகுதி மக்களுக்கு எழுதி தீர்க்கப்படவேண்டிய பிரச்சனைகளை பற்றி குறிப்பிட்டுள்ளார்.

இவருக்கு பதிலாக 85 வயது நிரம்பிய இவரின் தாய் வெற்றிக்காக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர். இவருக்காக பிரபல சமூக சேவகர் மேதா பட்கர், சந்தீப் பாண்டே ஆகியோர் அசாம் மாநிலத்துக்கு வந்து அகிலின் தாயாருடன் ஒன்றிணைத்து தீவிர பிரசாரம் நடத்தி மேற்கொண்டுள்ளன. இவர்களுடன் இணைந்து ராய்ஜோர் கட்சியின் தேர்தல் களத்தில் கடுமையாக பாடுபட்டு உள்ளன. இவர்களின் வேண்டுதல்கள் நிறைவேற்றிய படி 57 ஆயிரத்து 219 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

இவருக்குப் பின் 2-வது இடம் பெற்ற பாஜக வேட்பாளர் சுரபி ராஜ்கோன்வாரிக்கும்  இடையிலான மொத்த வாக்குகளின் வித்தியாசம் 11 ஆயிரத்து 875 மதிப்பில் இருந்தது. இந்த வெற்றி பெரும் போராட்டத்திற்கு பின்பு கிடைத்த ஒன்றாகும். அகில்கோகோய் சிறையில் இருந்தபடியே வென்ற முதல் நபர் தேசிய அளவில் முன்னாள் மத்திய மந்திரி ஜார்ஜ் பெர்னாண்டசுக்கு பிறகு 2-வது நபர் என வரலாற்றில் தனது பெயரை பதித்துள்ளார். சிறையில் இருந்தபடியே வெற்றிவாகை சூடிய முதல் நபர் ஆவார்.

Categories

Tech |