Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

நன்கு விளைந்த தர்பூசணி…. வாங்க வராத வியாபாரிகள்…. விளைநிலத்திலேயே அழுகிப்போகும் பழங்கள்….!!

விலை நிலத்திலேயே தர்பூசணி பழங்கள் அழுகிப்போகும் நிலை ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.

தமிழ்நாட்டில் இந்த ஆண்டு பருவமழை பொய்த்து போனதால் விவசாயிகள் நிலத்தடி நீர் மூலமாகவும் பம்புசெட்டுகள் மூலமாகவும் கிணற்றில் உள்ள நீர் மூலமாகும் பல ஏக்கரில் மணல் தொடர்களில் தர்பூசணி சாகுபடி செய்துள்ளனர். இதுகுறித்து  திருக்கடையூர் விவசாயிகள் கூறும்போது நாங்கள் இந்த ஆண்டு கோடை வெயில் வாட்டி வதைக்கும் என்பதால் தர்பூசணி அதிகளவு சாகுபடி செய்து வந்தோம்.

இந்த பயிர்கள் 60 நாட்களில் நன்கு வளர்ந்து தற்போது அறுவடைக்கு தயாராகி உள்ளது. இதனால் அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. மேலும் அறுவடை செய்த பழங்களை உள்ளூர் மற்றும் வெளியூர் வியாபாரிகள் வாங்கி செல்வது வழக்கமான ஒன்று. ஆனால் இந்த ஆண்டு கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவி கொண்டிருப்பதனால் மத்திய மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அந்த வகையில் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் தர்பூசணி வாங்க வரும் வியாபாரிகளின் வருகை குறைந்துள்ளது. அதன் காரணமாக விவசாயிகள் தர்பூசணி பழங்களை அறுவடை செய்யாமல் அப்படியே நிலத்தில் விட்டுவிட்டனர். இதனால் விலை நிலத்திலேயே தர்பூசணி பழம் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதனை கவனத்திற்கு கொண்டு வந்து விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என அவர் கேட்டு கொண்டுள்ளார்.

Categories

Tech |