இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. பல மாநிலங்களில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக பல நோயாளிகள் உயிரிழந்து வருவது அதிகரித்து கொண்டு வருகின்றது.
இந்நிலையில் கொள்கை முடங்கிய அரசாங்கத்தால் கொரோனா வைரசுக்கு எதிராக பாதுகாப்பான வெற்றியை பெற முடியாது. அதை எதிர் கொள்ளுங்கள். அதை பொய்யாக மாற்றாதீர்கள் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். அதிக அளவிலான பொதுமக்களின் பணம் கொரோனா தடுப்பூசி தயாரிக்க தனியாருக்கு வழங்கப்பட்டுள்ளது என அவர் கூறியிருந்த நிலையில் தற்போது தடுப்பூசி விலை அதிக விலைக்கு விற்கப் படுவது குறிப்பிடத் தக்கது.