ஜேர்மனியில் சிறுவர்களின் மிகப்பெரிய ஆபாச வலைதளத்தை நிர்வகித்த மூவர் காவல்துறையினரால் செய்யப்பட்டு, வலைதளம் முடக்கப்பட்டுள்ளது.
ஜெர்மனியில் உள்ள பிராங்க்பர்ட் என்ற நகரின் காவல்துறையினருக்கு, சிறுவர்களுக்கான ஆபாச வலைதளம் தொடர்பில் ரகசியமாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக தனிக்குழு அமைக்கப்பட்டு, காவல்துறையினர் தேடுதல் வேட்டையைத் தொடங்கியுள்ளனர். இதன்படி Paderborn, Munich மற்றும் வடக்கு ஜெர்மனி போன்ற 3 பகுதிகளை சேர்ந்த நபர்கள் அந்த வலைதளத்தை உருவாக்கி இயக்கிவந்தது தெரியவந்தது. அந்த மூவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மேலும் அவர்களிடமிருந்து கணினிகள் மற்றும் ஆபாச படங்கள் மீட்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ஹாம்பர்க் நகரில் வசிக்கும் 64 வயதுடைய ஒரு நபரும் சந்தேகிக்கப்படுகிறார். அதாவது இந்த வலைதளத்தில் சுமார் 3500 க்கும் அதிகமான புகைப்படங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வலைதளத்தை அதிகமாக இந்த நபர் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அவரை விரைவில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. ஏப்ரல் மாதத்தில் பல சோதனைகளுக்கு பின்பு அந்த வலைதளம் முடக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஜெர்மன் காவல்துறையினர் தெரிவித்துள்ளதாவது, கடந்த 2019ஆம் வருடத்திலிருந்து சிறுவர்களின் ஆபாச வலைதளத்தை இவர்கள் இயக்கி வந்துள்ளனர்.
இவர்களின் தலைவர், பராகுவே நாட்டில் தலைமறைவாகியிருந்தார். ஐரோப்பிய காவல்துறையினரின் உதவியால் அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த நபரை நாடு கடத்துவதற்கு விண்ணப்பித்துள்ளோம். உலகம் முழுவதும் சுமார் 4 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பணம் கொடுத்து, சிறுவர்களின் ஆபாசப்படங்களை பார்த்திருக்கின்றனர். தற்போது அது முடக்கப்பட்டுவிட்டது என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.