இரண்டு கார்கள் மோதிய விபத்தில் இரு வாலிபர்கள் படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கயத்தாறு பகுதியில் அழகு கனி என்பவர் வசித்து வருகிறார். இவர் கயத்தாறில் இருந்து நெல்லைக்கு காரில் தனது நண்பரான பேச்சிமுத்து என்பவருடன் சென்று கொண்டிருந்தார். அதேசமயம் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட செயலாளர் கஜேந்திரன் என்பவர் தனது காரில் திருநெல்வேலி நோக்கி சென்று கொண்டிருந்தார்.
இந்நிலையில் சிறுநீர் கழிப்பதற்காக கஜேந்திரனின் காரானது சற்று சாலையோரம் ஒதுங்கிய போது பின்னால் வந்து கொண்டிருந்த அழகு கனியின் கார் இவர்களின் கார் மீது மோதி விட்டது. இந்த விபத்தில் அழகு கனிக்கும், பெச்சிமுத்துக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயமடைந்த இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.