தெலுங்கானாவில் பஸ் நிலையத்தில் 1,000 ரூபாய்க்கு விற்க முயன்ற 7 மாத பெண் குழந்தையை காவல்துறையினர் மீட்டனர்.
தெலுங்கானா மாநிலத்தில் ஜனகாம்ப மாவட்டம் தென்பருத்தி கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண் பிறந்து ஏழு மாதமேயான பெண் குழந்தையுடன் பஸ் நிலையத்தில் அமர்ந்திருந்தார் . அப்போது அவர் குழந்தையை ஆயிரம் ரூபாய்க்கு விற்க முயன்றதாக கூறப்படுகிறது. உடனே அங்கிருந்த பொதுமக்கள் காவல்துறையினருக்கு தெரிவித்தனர் .
அதன்பின் காவல்துறையினர் விரைந்து சென்று குழந்தையை மீட்டு குழந்தைகள் நல அதிகாரியிடம் ஒப்படைத்தனர் . இந்நிலையில் பசியால் துடித்த குழந்தைக்கு அவர்கள் பால் வழங்கி பராமரித்தனர். பின்னர் காவல்துறையினர் அப்பெண்ணிடம் நடத்திய விசாரணையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட சண்டையில் குழந்தையுடன் அப்பெண் வெளியேறியதாக கூறினர்.
மேலும் , இதற்குமுன் பெண் குழந்தைக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் வாரங்கள் கடந்த 20 நாட்களாக வாரங்கால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாக கூறினார். அதன்பின் குழந்தை அந்தப் என்னிடம் ஒப்படைத்த காவல்துறை நெருக்கமாய் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.