தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் வாக்கு எண்ணிக்கை கடந்த மே இரண்டாம் தேதி நடைபெற்றது. அதில் பெரும்பான்மையான தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றது. இதனை அடுத்து தமிழகத்தின் முதல்வராக திமுக தலைவர் ஸ்டாலின் மே 7-ஆம் தேதி பொறுப்பேற்கிறார். கொரோனா காரணமாக ஆளுநர் மாளிகையில் மிக எளிமையான முறையில் பதவி ஏற்பு விழா நடைபெற உள்ளது. இதனையடுத்து நேற்று முதலே ஸ்டாலின் தனது முதல்வர் பணிகளை செய்யத் தொடங்கியுள்ளார்.
இதனையடுத்து ஆளுநர் மாளிகையில் முதல்வர் பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் மும்முரமாக நடந்து கொண்டிருக்கின்றன. அங்கு பணியில் ஈடுபடும் ஊழியர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி பாதுகாப்பு பணியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.