சன்டிவி மகராசி சீரியல் நடிகை மௌனிகாவுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அவளும் நானும் சீரியல் மூலம் ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் மௌனிகா . இவர் இந்த சீரியலை தொடர்ந்து வேறொரு தொலைக்காட்சி சீரியலில் நடித்து வந்தார். தற்போது நடிகை மௌனிகா சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் மகராசி சீரியலில் நடித்து வருகிறார் .
இந்நிலையில் சமீபத்தில் நடிகை மௌனிகாவிற்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. மேலும் மௌனிகாவின் வருங்கால கணவருடன் மகராசி சீரியல் பிரபலங்கள் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.