தல அஜித்தின் செம மாஸ் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித் தற்போது வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார். எச்.வினோத் இயக்கி வரும் இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பிரபல ஹிந்தி நடிகை ஹூமா குரேஷி நடித்து வருகிறார். போனி கபூர் தயாரிக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அஜித்தின் பிறந்த நாளான மே 1ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் தற்போது தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை வேகமாக பரவி வருவதால் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிடவில்லை. இதனால் அஜித் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இந்நிலையில் தல அஜித் ‘ரேசர்’ எனும் பெயர் எழுதப்பட்டுள்ள பனியனை போட்டுக் கொண்டு செம மாஸ் போஸ் கொடுத்து எடுத்துள்ள புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்தப் புகைப்படத்தை அஜித் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.