Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

அனுமதியின்றி மது பாட்டில்கள் விற்பனை… ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார்… கைது செய்யப்பட்ட 4 பேரிடம் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் அனுமதியின்றி மது விற்பனை செய்த 4 பேரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது வெவ்வேறு இடங்களில் மது விற்பனை செய்த 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அதன்படி செங்கமலப்பட்டி பகுதியில் சிவகாசி கிழக்கு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது காரனேசன் காலனியை சேர்ந்த சுந்தரமூர்த்தி என்பவர் அனுமதியின்றி மது விற்றதால் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம் இருந்த 8 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.

இதையடுத்து சிவகாசி-விருதுநகர் பிரதான சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் ஆரணியை சேர்ந்த ஜோதிராஜ்(24) என்பவரிடமிருந்து 11 மது பாட்டில்களை பறிமுதல் செய்து அவரையும் கைது செய்துள்ளனர். இதனை தொடர்ந்து திருத்தங்கல் காவல் துறையினர் பஜார் பகுதியில் சோதனையில் ஈடுபட்ட போது விக்னேஷ் என்ற 25 வயது இளைஞரிடமிருந்து 5 மது பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர்.

இதேபோல் முழு ஊரடங்கின்போது சங்கரநத்தம் பேருந்து நிலையம் அருகே அனுமதி இன்றி மதுபாட்டில்களை விற்பனை தங்கமாரியப்பன் என்பவரிடம் இருந்து 20 மது பாட்டில்களை பறிமுதல் செய்த சாத்தூர் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்செய்யது இப்ராஹீம் தங்கமாரியப்பனை கைது செய்துள்ளனர். மேலும் கைது செய்யப்பட்ட நான்கு பேரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |