Categories
சினிமா தமிழ் சினிமா

‘பாரதிகண்ணம்மா’ சீரியல் நடிகர் அகிலின் அம்மாவா இவர்?… வெளியான அழகிய புகைப்படம்…!!!

பாரதிகண்ணம்மா சீரியல் நடிகர் அகில் தனது அம்மாவுடன் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகியுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் சீரியல்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் பாரதிகண்ணம்மா சீரியல் தொடர்ந்து டிஆர்பி-யில் உச்சத்தில் இருந்து வருகிறது. தற்போது இந்த சீரியல் புது திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சீரியலில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

அதிலும் குறிப்பாக இந்த சீரியலில் கதாநாயகனின் தம்பியாக நடித்து வரும் அகில் தனது சிறப்பான நடிப்பின் மூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளார் . இந்நிலையில் சமீபத்தில் நடிகர் அகில் தனது அம்மாவின் பிறந்த நாளை கேக் வெட்டி மகிழ்ச்சியாக கொண்டாடியுள்ளார். மேலும் பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது எடுத்துக்கொண்ட புகைப்படத்தை அகில் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் .

Categories

Tech |