ஐபில் போட்டியை நிறுத்தியதற்கான காரணத்திற்கு ,பிசிசிஐ தலைவரான ராஜீவ் சுக்லா விளக்கம் அளித்துள்ளார் .
14 வது ஐபிஎல் தொடரானது கடந்த மாதம் 9-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வந்த நிலையில் ,ரசிகர்களுக்கு அனுமதி இன்றி பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி போட்டிகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் நேற்று கொல்கத்தா அணியில் 2 வீரர்களுக்கும் சிஎஸ்கே அணியை சேர்ந்த பயிற்சியாளருக்கும் தொற்று பாதிப்பு ஏற்பட்டது. இதனால் நேற்று நடக்கவிருந்த கொல்கத்தா – பெங்களூர் அணிகளுக்கிடையேயான போட்டி ரத்து செய்யப்பட்டது.
ஆனால் இன்று அணியில் இடம் பெற்றுள்ள , ஒரு சில வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனால் வீரர்களுக்கு தொற்று பரவியதால் , இந்த ஐபிஎல் தொடரை தற்காலிகமாக நிறுத்துவதாக ,பிசிசிஐ தலைவரான ராஜீவ் சுக்லா அறிவிப்பை வெளியிட்டார். மேலும் இது பற்றிய அவர் வெளியிட்ட அறிக்கையில் , ஐபிஎல் போட்டியில் பங்கு பெற்றுள்ள அனைத்து வீரர்கள், ஊழியர்கள் மற்றும் தொழில்நுட்ப ஊழியர்களின் நலனை கருத்தில் கொண்டே ,ஐபிஎல் தொடர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதில் வீரர்கள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பு பற்றிய விஷயம் என்பதால் , இதில் எந்த ஒரு சமரசமும் செய்ய முடியாது.
இதனால் அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் மற்றும் ஊழியர்கள் பாதுகாப்பாக , அவர்கள் நாடு திரும்புவதற்கு அனைத்து ஏற்பாடுகளையும் முறையாக செய்வோம். இந்தியாவில் கொரோனா தொற்று சூழலில் மக்களை மகிழ்விப்பதற்காக, ஐபிஎல் போட்டி நடைபெற்று வந்ததாகவும், இந்நிலையில் பயோ பாதுகாப்பு வளையத்தில் இருந்த வீரர்கள் மற்றும் ஊழியர்களுக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டதால் ,அவர்களின் பாதுகாப்பு விஷயத்தில் எந்த ஒரு சமரசமும் செய்ய முடியாது என்றும், பிசிசிஐ மற்றும் ஐபிஎல் நிர்வாகம் இணைந்து ஆலோசித்த பிறகு தான் ,இந்த முடிவு எடுக்கப்பட்டது என்றும் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.