23 வயது இளைஞர் ஒருவரை போலீசார் வீடு புகுந்து அதிரடியாக கைது செய்து இழுத்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுவிட்சர்லாந்தின் சூரிச் மாகாணத்தில் Zollikon பகுதியில் 23 வயது இளைஞர் ஒருவர் வசித்து வருகிறார். இவர் உக்ரேனிய நாட்டைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது. அவரால் சுவிஸ் சமூகத்திற்கு மிகுந்த அச்சுறுத்தல் என உறுதி செய்யப்பட்டவுடன் போலீசார் அவரை வீடு புகுந்து கைது செய்து வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றுள்ளனர்.
மேலும் இதுகுறித்து போலீஸார் தரப்பில் கூறும்போது விரிவான பரிசோதனைகள் மற்றும் விசாரணை நடத்திய பின்பே அந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் போலீஸ் இதுபோன்ற அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்து இளைஞர் ஒருவரை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்ற சம்பவத்தை அப்பகுதி மக்கள் சிலர் நேரில் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பில் தற்போது அரசு சட்டத்தரப்பு அலுவலகம் சார்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.