சாலையில் இருக்கும் சந்து ஒன்றில் வைத்து இளம்பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லண்டனில் இருக்கும் சாலை ஒன்றில் சந்து பகுதியில் இளம் பெண் ஒருவர் கடந்த 21ஆம் தேதி மாலை 3.30 மணிக்கு சென்று கொண்டிருந்தார். அந்த சமயத்தில் அவரை ஒரு நபர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து அந்த பெண் போலீசில் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின் பேரில் பாலியல் தொல்லை செய்த அந்த நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் அந்த பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட இடத்தின் அருகில் தான் பள்ளிக்கூடமும் இருசக்கர வாகனங்களை பழுது பார்க்கும் இடமும் இருந்துள்ளது.
இதுகுறித்து காவல்துறை அதிகாரி நியல் மெக்குளோஸ்கி கூறும்போது “இந்த சம்பவம் தொடர்பாக யாருக்காவது என்ற தகவலும் தெரிந்திருந்தால் உடனடியாக எங்களிடம் வந்து தெரிவிக்கலாம். பாலியல் ரீதியான புகார்கள் மீது நாங்கள் அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். மேலும் புகார் கொடுத்துவர்களுக்கு சாதகமாகவும் ஆதரவாகவும் நாங்கள் இருப்போம்” என அவர் கூறியுள்ளார்.