இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால், மக்கள் படும் துன்பத்தை கண்டு இதயம் நொறுங்கிவிட்டதாக, கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸின் 2ம் அலை கோரத் தாண்டவம் ஆடுகிறது. தொற்றால் பாதித்தவர்களின் , தினசரி எண்ணிக்கை மூன்று லட்சத்தை கடந்துள்ளது. நோயினால் பாதிக்கப்பட்ட மக்கள் ,மருத்துவமனைகளில் இடமில்லாமல் தவித்து வருகின்றனர். மருந்துகள் மற்றும் ஆக்சிசன் தட்டுப்பாட்டால் மக்கள் உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த மாதம் 9 தேதி முதல் தொடங்கி ,நடைபெற்று வந்த ஐபிஎல் போட்டிகளும் இன்று முதல் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக ,பிசிசிஐ அறிவித்துள்ளது.
இந்நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனான கெவின் பீட்டர்சன், ட்விட்டர் பக்கத்தில் இந்தியாவின் நிலையை கண்டு மிகவும் உருக்கமான பதிவு ஒன்றில் வெளியிட்டுள்ளார். அதில் நான் மிகவும் நேசித்த ஒரு நாடு, இப்படி துன்பத்தில் வீழ்ந்திருப்பதைப் பார்க்கும்போது, என்னுடைய இதயம் நொறுங்கி விட்டது , இந்த இக்கட்டான சூழலை நிச்சயமாக ,இந்தியா கடந்துவிடும் என்றும் ‘இன்கிரெடிபிள் இந்தியா’ கேவின் பீட்டர்சன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
https://twitter.com/KP24/status/1389501826148573184