இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுடன் சுந்தரி சீரியல் நடிகை கேப்ரியலா எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படம் வெளியாகியுள்ளது .
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் சுந்தரி சீரியலுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த சீரியலில் நடிகை கேப்ரியலா கதாநாயகியாக நடித்து வருகிறார். இவர் நடிகை நயன்தாரா நடிப்பில் வெளியான ஐரா படத்தில் நடித்து பிரபலமடைந்தவர் . இந்நிலையில் நடிகை கேப்ரியலா இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுடன் இணைந்து எடுத்துக் கொண்ட செல்பி புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
அதாவது ஏ.ஆர் ரஹ்மானின் ‘மூப்பில்லா தமிழே தாயே’ பாடலில் கேப்ரியலா பணிபுரிந்துள்ளார். அப்போது ஏ.ஆர்.ரஹ்மானுடன் இணைந்து எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படத்தை கேப்ரியலா தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.