கொரோனா நோய் பரவலை தடுக்க மக்கள் இயக்கமாக மாறி செயல்படுவோம் என்று திமுக தலைவரும் தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள மு க ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட புதிய கட்டுப்பாடுகளை மக்கள் அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். கொரோனா இரண்டாவது அலை என்பது, முதல் அலையைவிட மிக மோசமானதாக உள்ளது எனவும் அதிக அளவு உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இந்த துயர்மிகு நிலையை மக்கள் அனைவரும் முதலில் உணர வேண்டும் என்று கூறினார்.
வட மாநிலங்களிலிருந்து வரும் தகவல்கள் அச்சம் தருவதாக உள்ளது. நூற்றுக்கணக்கான மரணங்கள் தினமும் நடந்துகொண்டு வருகின்றது. அதனால் தமிழகத்தில் உள்ள மக்கள் எச்சரிக்கையாக இருப்பது மட்டுமல்லாமல் அதிகப்படியான எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதனை மனதில் கொண்டு தமிழக அரசு சார்பில் நேற்று புதிய கட்டுப்பாடுகள் அளிக்கப்பட்டுள்ளது.
இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. புதிய கட்டுப்பாடுகள் மே 6 ஆறாம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும். எனவே இவற்றை மக்கள் கடைபிடித்து அரசுக்கு உதவுமாறு கேட்டுக் கொண்டார். அவசரம், அவசியம் இல்லாமல் வீட்டைவிட்டு வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும்.
அப்படியே வெளியில் வந்தாலும் முக கவசம் அணிவது. மூக்கையும் வாயையும் மூடி இருப்பதை உறுதி செய்ய வேண்டும். பேசுகிறபோதும் பணியிலிருக்கும் முககவசம் கட்டாயம். குளிர்சாதன அறைக்குள் இருப்பவர்கள் ஜன்னல்களை திறந்து வைத்திருப்பது அவசியம். கிருமிநாசினி திரவங்களை அடிக்கடி பயன்படுத்துங்கள். கபசுர நீரை குடியுங்கள் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.