Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசே! “நீங்கள் நெருப்புக்கோழி போல இருங்கள்” டெல்லிக்கு ஆக்சிஜன் கொடுங்கள் – உயர்நீதிமன்றம் கண்டனம்…!!!

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகம் எடுத்து வருகிறது. இதனால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இந்நிலையில் தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனாவின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் நிரம்பி வழிவதால் படுக்கை வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது.

எனவே பள்ளிகள், கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்களில் படுக்கை வசதிகள் ஏற்படுத்த தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. கொரோனா இரண்டாவது அலை தாக்கத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. இது குறித்த உண்மை நிலவரம் உறைய வைக்கிறது. இந்நிலையில் தலைநகர் டெல்லியிலேயே ஆக்சிஜன் பற்றாக்குறையால் கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர்.

இதனால் கொரோனாவால் இந்தியா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக டெல்லியில் மோசமான சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில் டெல்லி உயர் நீதிமன்றம் மத்திய அரசை, “நீங்கள் வேண்டுமானால் நெருப்பு கோழி போல உங்கள் தலையை மண்ணில் புதைத்துக் கொள்ளுங்கள். ஆனால் எங்களால் அதுபோன்று இருக்க முடியாது. டெல்லிக்கு தினமும் 700 மெட்ரிக் டன் ஆக்சிஜன் வினியோகத்தை உறுதி செய்யுங்கள்” என்று கண்டனம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |