கடந்த சட்டப்பேரவை கூட்டத்தில் தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 59 வயதிலிருந்து 60 ஆக உயர்த்தி தமிழக அரசு அரசாணை இயற்றப்பட்டது. ஆனால் அந்த அரசாணை நடைமுறையில் இல்லாமலே இருந்தது. இந்நிலையில் தற்போது தமிழக அரசு தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்தி அரசாணை வெளியிட்டுள்ளது. இதன்மூலம் கூடுதலாக ஒரு வருடம் அரசுப் பணியாளர்களாக தொடரும் வாய்ப்பு கிடைத்துள்ளது. முன்னதாக ஒப்பந்த செவிலியர்களை பணி நிரந்தரம் செய்தது குறிப்பிடத்தக்கது.
Categories