Categories
உலக செய்திகள்

“கோடைகாலம் சிறப்பாக அமையும்!”.. ஜெர்மனில் பெருமளவு குறைந்த கொரோனா.. நிபுணர்கள் நம்பிக்கை..!!

ஜெர்மனில் வெளியான புள்ளிவிவரங்களின் படி, பல்வேறு மாகாணங்களில் கொரோனா பாதிப்பு கடந்த வாரத்தை விட குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஜெர்மன் நாட்டில் Robert Koch நிறுவனம் கொரோனா பாதிப்பு தொடர்பில் புள்ளி விவரங்கள் வெளியிட்டுள்ளது. அதன்படி நாட்டிலுள்ள 412 மாவட்டங்களில் 103 மாவட்டத்தில் ஒரு லட்சம் நபர்களில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 100க்கும் கீழ் குறைந்திருக்கிறது. கடந்த வாரத்தில் 57 மாவட்டங்களில் தான் 1,00,000 பேரில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 100 க்கும் கீழ் இருந்தது.

எனவே நாட்டில் நேர்மறையான அறிகுறிகள் காணப்படுகிறது. இன்று மட்டும் நாட்டில் சுமார் 7,534 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் கடந்த வாரத்தில் 10,976 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். தொற்று குறைய முக்கிய காரணம், மக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்தது முதல் அனைத்து கட்டுப்பாடுகளையும் முறையாக கடைபிடித்தது தான் என்று நிபுணர்கள் கூறியுள்ளார்கள்.

மேலும் தடுப்பூசி செலுத்தும் திட்டம் இதில் முக்கிய பங்கு வகிக்கிறது. தற்போது நல்ல முன்னேற்றம் அடைந்து வருகிறது. மேலும் தடுப்பூசிகள் பலனளிப்பதற்கு இன்னும் சில காலங்கள் எடுத்துக்கொள்ளும். எனவே இந்த மாத கடைசியில் மேலும் நல்ல முன்னேற்றங்களை காண முடியும். எப்படியும் இந்த கோடை காலம் சிறப்பாக அமையும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளார்கள். அமையட்டும்..!!

Categories

Tech |