வீட்டில் உள்ள எரிவாயு வெடித்ததில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டு இரண்டு பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்து நாட்டில் ஆஷ்ஃபோர்டு நகரில் Willesborough, Mill View பகுதியில் இன்று காலை 8 மணிக்கு ஒரு வீட்டிலிருந்து வெடிகுண்டு வெடித்தது போன்ற சட்டம் கேட்டுள்ளது. உடனடியாக அக்கம்பக்கத்தினர் வெளியே ஓடிவந்து பார்த்தபோது அருகாமையில் இருந்த ஒரு வீடு தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. இது குறித்து தீயணைப்பு துறையினருக்கும் மீட்புப் படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தகவலின் பேரில் அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
சுமார் ஒரு மணி நேரப் போராட்டத்திற்குப் பின்பு இந்த தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த விபத்தில் இரண்டு பேர் தீயில் கருகி இறந்து இருக்கலாம் என தகவல் வெளியாகின்றன. மேலும் இந்த தீ விபத்து ஏற்பட்ட வீட்டில் இருந்து சிலரை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டுள்ளனர். இந்த விபத்து வீட்டிலிருந்து எரிவாயு வெடித்ததால் ஏற்பட்டிருக்கலாம் என போலீசாரால் கூறப்படுகிறது. இந்த விபத்தினால் அந்த வீட்டின் ஒரு ஒரு பகுதி முழுமையாக சேதம் அடைந்து விட்டதாகவும் போலீசார் கூறுகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.