திண்டுக்கல்லில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் நுங்கு விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.
திண்டுக்கல்லில் சில தினங்களாக கோடை வெயிலின் தாக்கம் சற்று அதிக அளவில் உள்ளது. இதன் காரணமாக இளநீர், நுங்கு, பழச்சாறு மற்றும் குளிர்பானங்களின் விற்பனை அதிகரித்துள்ளது. அதிலும் குறிப்பாக உடலுக்கு சக்தியும், குளிர்ச்சியும் தருகின்ற நுங்கு விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.
திண்டுக்கல் நகரில் உள்ள முக்கிய சாலை பகுதிகளில் ஏராளமானோர் நுங்குகளை குவித்து வைத்து விற்பனை செய்கின்றனர். அவற்றை வயதானவர்கள், குழந்தைகள் மற்றும் பலரும் விரும்பி வாங்கி சாப்பிடுகின்றனர். அவற்றில் இரண்டு நுங்குகள் வீதம் ரூ. 50 வரை வியாபாரிகள் விற்பனை செய்து வருகின்றனர்.